Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் கலந்துரையாடல்!

In இலங்கை
Updated: 10:17 GMT, Jan 8, 2018 | Published: 10:17 GMT, Jan 8, 2018 |
0 Comments
1163
This post was written by : Ravivarman

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் இன்று (திங்கட்கிழமை) இடப்பெற்றது.

கிளிநொச்சி தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் கட்சியின் செயலாளர் இரா.சங்கையா தலைமையில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றது.

கரைச்சி பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்கள் இதில் கலந்து கொண்டிருந்ததுடன், தேர்தல் குறித்து முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டிருந்தன.

இதேவேளை எதிர்வரும் 10ஆம் திகதி மூன்று சபைகளிலும் போட்டியிடும் தமிழ்த் தேசிய விடுதலை கூட்டமைப்பின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கிளிநொச்சி பொது சந்தை வளாகத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg