Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீன கடற்பரப்பில் மாலுமியொருவரின் சடலம் கண்டெடுப்பு

In
Published: 10:12 GMT, Jan 8, 2018 |
0 Comments
1058
This post was written by : Suganthini

சீனாவுக்கு அப்பாலான கடற்பரப்பில் எண்ணெய்த்தாங்கிக் கப்பலும் சரக்குக் கப்பலும் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, காணாமல் போயுள்ள மாலுமிகளில் ஒருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, சீன வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

சீனாவின் ஸாங்காய் மாகாணத்தில், பனாமா நாட்டுக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பலும், ஹொங்கொங்குக்குச் சொந்தமான சரக்குக் கப்பலும்  நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) மோதி விபத்துக்குள்ளானது.

இந்த இரு கப்பல்களும் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து 32 மாலுமிகள் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைத் தேடும் நடவடிக்கையை விபத்து இடம்பெற்று இரண்டாவது நாளாகவும் இன்று (திங்கட்கிழமை) மீட்புப் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஒருவரது சடலத்தைக் கண்டெடுத்துள்ளதாகவும், அவ்வமைச்சு கூறியுள்ளது.

ஏனையோரைத் தேடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும், அவ்வமைச்சு கூறியுள்ளது.

இதேவேளை, மேற்படி எண்ணெய்த்தாங்கி வெடிக்கும் அபாயத்தில் காணப்படுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)