Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனடாவில் இளம் யுவதிக்கு ஏற்பட்ட நிலை!

In கனடா
Published: 11:05 GMT, Jan 8, 2018 |
0 Comments
1170
This post was written by : Puvanes
canada002

கனடா ஸ்கார்பாரொவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம்யுவதி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 20 வயது மதிக்கத்தக்க யுவதி ஒருவர் மீது பேருந்து ஒன்று மோதியுள்ளது. எனினும் குறித்த பேருந்து தொடர்பில் இதுவரையிலும் விபரங்கள் எதுவும் தெரியவரவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோன்று, ஆபத்தான நிலையில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள யுவதி தொடர்பாகவும் இது வரையிலும் மேலதிக தகவல்கள் தெரியவில்லை எனவும், அவர் அடையாளப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விபத்து நடைபெற்ற பாதையின் பகுதியை மறைத்து பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த 3ஆம் திகதியும் (புதன்கிழமை) குறித்த பகுதியில் விபத்து ஒன்று ஏற்பட்டு இருவர் உயிரிழந்தனர் என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)