சீனாவில் சத்திர சிகிச்சை மேற்கொண்ட ரோபோ!
This post was written by : Kemasiya

சீனாவின் டியாஞ்சி ஹெபியில் உள்ள வைத்தியசாலையில் வெறும் 30 நிமிடங்களில் ரோபோ ஒன்று சத்திரசிகிச்சையை மேற்கொண்டுள்ளது.
முழங்கால்களில் எழும்புப் பிடிப்பு ஏற்பட்டு நடக்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்ட 43 வயதான நபர் ஒருவருக்கு, கடந்த வாரம் இந்த ரோபோ மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சத்திரசிகிச்சைக்கு முன்னர் அவரின் உடலை ஸ்கான் செய்து ரோபோவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் சிகிச்சையை மேற்கொண்ட ரொபோ 30 நிமிடங்களில் சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளது.