Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யேமனில் சுட்டு வீழ்த்தப்பட்ட சவுதி போர் விமானம்

In உலகம்
Published: 11:26 GMT, Jan 8, 2018 |
0 Comments
1095
This post was written by : Suganthini
yemen

யேமனில், சவுதி அரேபியாவுக்குச் சொந்தமான போர் விமானமொன்று கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

சதாவில் பறந்துகொண்டிருந்த இந்த விமானத்தை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியதாகவும், இத்தகவலை ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஊடகமொன்று வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டமை தொடர்பான தகவலை சவுதி அரேபியா மறுத்துள்ளது. போர் விமானம் விபத்துக்குள்ளானமைக்குத் தொழில்நுட்பக் கோளாறே காரணமென்று தெரிவித்துள்ளது.

அண்மைக்காலமாக யேமன் எல்லையிலிருந்து சவுதி அரேபியாவின் முக்கிய தளங்களை இலக்குவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)