Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொங்கலுக்கு மூன்று படங்கள் மட்டுமே!!

In சினிமா
Published: 11:41 GMT, Jan 8, 2018 |
0 Comments
1094
This post was written by : Arul Jesu
maxresdefault (3)

2018ஆம் ஆண்டு பொங்கலுக்கு பல திரைப்படங்கள் வெளிவரவிருப்பதாக செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.

இந்நிலையில் கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்ட பொங்கல் வெளியீடான விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ வருகையால் பல திரைப்படங்கள் வெளியிடுவதை தள்ளிப்போடவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன.

‘ஸ்கெட்ச்’ திரைப்படம் களத்தில் இறங்கியுள்ளதால் ‘மதுரவீரன்’ படத்திற்கும் ‘மன்னர் வகையறா’ படத்திற்கும் தேவையான திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அவர்களும் பொங்கல் வெளியீட்டை ஜனவரி வெளியீடாக மாற்றியுள்ளனர்.

‘மன்னர் வகையறா’ படத்திற்கு விமல் வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்தும் அவருடைய படத்திற்கு தியேட்டர்கள் அதிகம் கிடைக்கவில்லை. அதனால் போட்டியிலிருந்து விலகவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் ‘மதுரவீரன்’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ஆகிய இரண்டு படங்களும் டிசம்பர் மாதத்திலிருந்து பொங்கலுக்கு வெளியிடுகிறோம் என தொடர்ச்சியாக அறிவித்து வந்தார்கள். அவர்களும் வெளியீட்டைத் தள்ளிப்போட முடிவெடுத்துள்ளனர்.

இறுதியில் பொங்கலுக்கு ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘குலேபகாவலி’, ‘ஸ்கெட்ச்’ ஆகிய மூன்று படங்கள் மட்டுமே வெளிவர உள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)