Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லசந்த படுகொலையின் குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகின்றனரா?- அமெரிக்கா கேள்வி

In இலங்கை
Updated: 11:49 GMT, Jan 8, 2018 | Published: 11:49 GMT, Jan 8, 2018 |
0 Comments
1240
This post was written by : Risha

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாத நிலையில், கொலையாளிகள் பாதுகாக்கப்படுகின்றனரா என்ற கேள்வி எழுந்துள்ளது என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்தவின் ஒன்பதாவது நினைவு தினமான இன்று (திங்கட்கிழமை) இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் துணை தூதுவர் றொபட் ஹில்டன் வெளியிட்ட டுவிட்டர் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

லசந்த கொலை தொடர்பாக அமெரிக்க தூதரகம் மேலும் தெரிவித்துள்ளதாவது, ”ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பாக அவரது உறவினர்கள் நீதியை கோரி நிற்கின்றனர். எனவே உரிய விசாரணை நடத்தி, அவரது குடும்பத்தினருக்கு நீதியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும்.

குறித்த படுகொலை தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும்” எனக் கோரப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg