Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஜினியின் முதல் மாநாடு எங்கே? : லாரன்ஸ் அறிவிப்பு

In சினிமா
Published: 12:13 GMT, Jan 8, 2018 |
0 Comments
1541
This post was written by : Arul Jesu
download-16

ரஜினிகாந்த் தனது அரசியல் வருகையை அறிவித்ததையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகின்றன.

இன்னும் கட்சியின் பெயர், கொடி அறிவிக்கப்படாத நிலையில் இந்த அறிவிப்பிற்காக எல்லோரும் காத்திருக்கின்றனர் என்பது உண்மை.

ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்ததை தொடர்ந்து மன்ற நிர்வாகிகள் ரசிகர்களை ஒருங்கிணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்கள்.

இவரின் அரசியல் பயணத்தின் முதல் மாநாடு மதுரையில் நடத்தப்படுவதாகவும், அதில் கட்சியின் பெயர், கொடி என்பன குறித்த அறிவிப்பு வெளியிடப்பட இருப்பதாகவும் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

தலைமை நற்பணி மன்றம் சார்பில் நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு பாராட்டு விழா, ரஜினிகாந்தின் 68ஆவது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா மதுரை அழகர் கோவிலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ராகவா லாரன்ஸ், திரைப்பட தயாரிப்பாளர் தியாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

இதன்போது லாரன்ஸ் பேசுகையில்:-

நான் 12 வயதில் இருந்து ரஜினியின் தீவிர ரசிகனாக உள்ளேன். தமிழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ரஜினிகாந்த் தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அவரது ஆன்மீக அரசியல் என்பது தனிப்பட்ட மதத்தை முன்னிலைப்படுத்துவது மட்டுமில்லை. அனைத்து சாதி, மதங்களை ஒருங்கிணைப்பது தான் ஆன்மீக அரசியல். அதை தவறாக புரிந்து கொண்டு விமர்சனம் செய்கிறார்கள்.

மதுரை ஒரு இராசியான மண். எனவே இந்த மண்ணில் இருந்து அரசியல் பிரவேசத்தை ரஜினி தொடங்குவார் என நாம் கருதுகிறோம். இதற்காக மதுரையில் முதல் அரசியல் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மதுரையில் நடைபெறும் மாநாட்டில் கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவை அறிமுகம் செய்யப்படும். இந்த மாநாடு விரைவில் நடைபெறும். கட்சியின் கொள்கைகள் குறித்த அறிவிப்பும் இந்த மாநாட்டில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்னை பொறுத்தவரை நான் எம்.எல்.ஏ.வாக வேண்டும் என்ற ஆசை இல்லை. ரஜினிகாந்துக்கு காவலனாக இருக்கவே ஆசைப்படுகிறேன்’ என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)