Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘பத்மாவத்’ ஆக மாறிய ‘பத்மாவதி’

In சினிமா
Updated: 12:40 GMT, Jan 8, 2018 | Published: 12:40 GMT, Jan 8, 2018 |
0 Comments
1128
This post was written by : Arul Jesu

மிகப்பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள படம் ‘பத்மாவதி’. ராஜஸ்தானின் சித்தூர் ராணியான பத்மினியின் கதையை மையமாக வைத்து ‘பத்மாவதி’ என்ற பெயரில் படம் உருவாகி இருக்கிறது.

இதில் ராணி பத்மாவதியாக நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ளார். இந்த படத்துக்கு ராஜபுத்திர வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக் கூடாது என்று ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியாவும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால் கடந்த டிசம்பர் மாதம் வெளியாக இருந்த ‘பத்மாவதி படத்துக்கு தணிக்கை குழு சான்றிதழ் அளிக்க மறுத்துவிட்டதால் படம் வெளியிடுவது நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் ஆட்சேபகரமான காட்சிகள் நீக்கப்பட்டு மீண்டும் டெல்லியில் உள்ள தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தணிக்கை குழுவினர் படத்தை பார்த்துவிட்டு சில திருத்தங்கள் செய்யுமாறு வலியுறுத்தினர். படத்தின் பெயரை மாற்றவும் சிபாரிசு செய்தனர்.

இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் ‘பத்மாவதி’ படத்தின் பெயர் மாற்றம் மற்றும் கனவு பாடலில் திருத்தத்துடன் படத்துக்கு தணிக்கை குழு அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து ராணி பத்மாவதியும், அலாவுதீன் கில்ஜியும் பாடும் கனவு பாடல் காட்சிகளில் மாற்றம் செய்யப்பட்டது. படத்தின் பெயர் ‘பத்மாவத்’ எனவும் மாற்றப்பட்டது. மொத்தத்தில் 26 காட்சிகளில் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ‘பத்மாவத்’ படத்துக்கு அனைவரும் பார்க்கும் வகையில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

படம் குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 26-ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்துக்கு எழுந்த எதிர்ப்பு மற்றும் சர்ச்சை காரணமாக படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg