Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புத்திஜீவிகளை வேட்டையாடியவர்கள் தேர்தலில் போட்டி: ஸ்ரீநேசன் எம்.பி.

In இலங்கை
Updated: 03:37 GMT, Jan 9, 2018 | Published: 02:23 GMT, Jan 9, 2018 |
0 Comments
1151
icon_com
This post was written by : Varothayan
DSC_0552

மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் ஊடகவியலாளர்கள், கல்விமான்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என தமிழ்ப் புத்திஜீவிகளை வேட்டையாடியவர்கள் இன்று மக்கள் முன் வாக்குக் கேட்டு வருகின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஏறாவூர் நான்காம் குறிச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி சபைத் தேர்தல் அலுவலகம் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மாலை திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஸ்ரீநேசன் எம்.பி. அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், ‘2005ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கிறிஸ்மஸ் ஆராதனையின் போது சுட்டுகொல்லப்பட்டதையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் மட்டக்களப்பு வரமுடியாத பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டது.

இந்த சந்தர்ப்பங்களில் நடைபெற்ற தேர்தல்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் வெற்றி பெற்றவர்கள் அந்த கனவுடன் இம்முறையும் போட்டியிட நினைக்கிறார்கள்.

2010இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டு மூன்று உறுப்பினர்கள் தெரிவானார்கள். ஆனால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தோல்வியையே சந்தித்தனர். அதைத் தொடர்ந்து நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஆசனங்களை கைப்பற்றியது.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அவரின் ஏவலாளர்களாக இருந்தவர்களினால் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு, ஊடகவியலாளர் நடேசன், நிர்மலராஜன், விரிவுரையாளர் தம்பையா, உபவேந்தர் ரவீந்திரநாத் உட்பட பல புத்திஜீவிகள், ஊடகவியாளர்கள், கல்விமான்கள் வேட்டையாடப்பட்டார்கள். இவர்களை வேட்டையாடிய வேட்டைக்காரர்கள் யார்?

இவர்களது பிரதிநிதிகள் உங்களிடம் வாக்குக்கேட்டு வந்தால், நீங்கள் கடத்தியவர்கள் காணாமல் ஆக்கியவர்களை நேரில் கொண்டு வந்தால், உங்களுக்கு ஆதரவு வழங்குவோம் எனக் கூறவேண்டும்’ என்றார்.

DSC_0536 DSC_0542

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)