Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நேர்மையற்ற அரசியல்வாதிகளை தூக்கி வீசுங்கள்: சண். குகவரதன்

In இலங்கை
Updated: 02:51 GMT, Jan 9, 2018 | Published: 02:51 GMT, Jan 9, 2018 |
0 Comments
1301
This post was written by : Varothayan

உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் ஊழல் இல்லாத, நேர்மையான, தூரநோக்குடைய அரசியல்வாதிகளை மக்கள் தெரிந்து எடுக்க வேண்டும். குப்பை அரசியல்வாதிகளை இனம் கண்டு, அவர்களை கூண்டோடு குண்டுக்கட்டாக தூக்கி எறிய வேண்டும் என ஒருமித்த முற்போக்கு கூட்டணியின் கொழும்பு மாநகர சபை முதல்வர் வேட்பாளர் சண். குகவரதன் தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபைத்தேர்தலில், ஒருமித்த முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணியின் ஏணிச் சின்னத்தில் போட்டியிடும் நிலையில், தங்களுடைய பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சண். குகவரதன் மேலும் தெரிவிக்கையில், ‘கடந்த ஆட்சியாளர்களினால் கொண்டுவரப்பட்ட சகல திட்டங்களிலும், ஊழல் தலைவிரித்தாடியது தெரிந்ததே! குறிப்பாக கொழும்பு மாநகரசபையின் எல்லைக்குள் இன்னும் குப்பை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணமுடியாமல் இருப்பதற்கு கடந்த ஆட்சியாளர்களே கரணம். குப்பைகளை அகற்றி தலைநகரை தூய்மையான நகரமாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளைக்கூட ஒழுங்கான முறையில் செயற்படுத்த கடந்த ஆட்சியாளர்களினால் முடியவில்லை.

அந்த காலகட்டத்தில் கொழும்பு மாநகரசபைக்கு, ஜேர்மனி, நியூசிலாந்து, டென்மார்க் ஆகிய நாடுகள், குப்பைகளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான திட்டத்திற்கு உதவ முன்வந்திருந்தன. எனினும், அந்த நேரத்தில் ஆட்சியாளர்களின் கைக்கூலிகளாக இருந்த ஒரு சிலர் குறித்த திட்டத்தினூடாக தரகுப்பணத்தினை எதிர்பார்த்து மேற்கொண்ட தீர்மானங்களினால், அந்த திட்டம் நிறைவேறவில்லை.

குறித்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருக்குமாயின் தலைநகரின் கணிசமான குப்பை பிரச்சினைக்கு தீர்வு கிடைத்திருக்கும் என்பதுடன் குறிப்பிடத்தக்க வருமானத்தையும் ஈட்டக்கூடியதாக இருந்திருக்கும். மீதொட்டமுல்ல அனர்த்தத்தினையும் எமது மக்கள் எதிர்கொண்டிருக்க மாட்டார்கள்.

நல்லாட்சி அரசாங்கத்தின் முயற்சியினால் பொலித்தீன் பாவனை கணிசமான அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதை அண்மைக்காலமாக அவதானிக்க கூடியதாகவுள்ளது. இவ்வாறான புதிய நவீன முறையில் பல செயல் திட்டங்களை கொழும்பு நகரத்துக்கு உள்ளே நாம் செயற்படுத்த இருக்கிறோம். இம்முறை நாம் இந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டால் இனி ஒரு சந்தர்ப்பம் எமக்கு கிடைக்கப்போவதில்லை. எமது பலம் எம்மிடம் தான் இருக்கின்றது. அதை பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி சரியாக நாம் நிரூபிப்போம்’- என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg