Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தினகரனின் வெற்றியில் சந்தேகம் எனத் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது-(2ஆம் இணைப்பு)

In இந்தியா
Updated: 06:25 GMT, Jan 9, 2018 | Published: 03:14 GMT, Jan 9, 2018 |
0 Comments
1196
This post was written by : Kemasiya
hjghjnhjn

ஆர்.கே.நகர். தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி.தினகரன், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பணம் கொடுத்தே வாக்குகளைப் பெற்றார் எனக்கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவினை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சட்டத்தரணி எஸ்.வி.ராம்மூர்த்தி என்பவரால் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி, இவ்வாறான மனுக்களை விசாரிக்க முடியாது எனக்கூறி தள்ளுபடி செய்துள்ளார்.

ஆர்.கே.நகர் தேர்தலில் டி.டி.வி. தினகரன் பணம் கொடுத்தே வாக்குகளைப் பெற்றார் என, ஆளும் கட்சி உட்பட எதிர்க்கட்சிகளும் விமர்சனங்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தினகரனின் வெற்றியில் சந்தேகம் – விசாரணைக்கு வருகிறது மனு!

ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்று அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகியுள்ள டி.டி.வி.தினகரனின் வெற்றி நேர்மையானது அல்ல என்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணி எஸ்.வி.ராம்மூர்த்தி என்பவர் தாக்கல் செய்த குறித்த மனு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

குறித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, “கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற ஆர்.கே.நகர் தேர்தலின் போது தினகரனுக்கு வேட்பாளர் உரித்து கொடுக்கப்பட்டு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்ட பின்னர், அத்தொகுதி மக்களுக்கு ஏராளமான பிரஸர் குக்கர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அதே பகுதியில் 30 லட்சம் பணத்துடன் ஒருவர் கைதாகியதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

எனவே இந்த வெற்றி டி.டி.வி.தினகரன் பணம் கொடுத்து வாங்கியது. நேர்மையாக இருக்க முடியாது” எனக் குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)