Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இறைவனை உருவ வடிவில் வழிபடுவது ஏன்?

In ஆன்மீகம்
Updated: 06:00 GMT, Jan 9, 2018 | Published: 05:46 GMT, Jan 9, 2018 |
0 Comments
1578
icon_com
This post was written by : Surenth
uruva vazhipadu

உருவ வழிபாட்டை தவறு என்று சொல்பவர்களும் கூட ஏதாவது ஒரு உருவ வடிவில் இறை நிலையை உருவகித்து பின்பற்ற வேண்டியதாக உள்ளது.

பல்வேறு விதமான கலைகளை விளக்கும் சாஸ்திரங்களை ரிஷிகளே படைத்துள்ளனர். அவர்கள்கூட தாமே அவற்றை இயற்றியதாக சொல்லவில்லை. தமது இறை தவத்தின் மூலம் கண்டுணர்ந்த சத்திய உணர்வின் வெளிப்பாட்டையே சாஸ்திரங்களாக படைத்துள்ளதாக கூறுகின்றனர்.

எனவே, அவர்கள் ‘மந்த்ர திருஷ்டா’ (மந்திரங்களை நேரில் கண்டவர்கள்) என்று அழைக்கப்பட்டனர். உருவங்கள் ஏதுமற்ற, அருவமாக இறைவனை உணர்வதற்கு முதிர்ந்த ஆன்ம நிலையின் வெளிப்பாடுகளை கொண்ட ஞானிகளால் மட்டுமே முடிகிறது. ஆனால், சாதாரண மனிதர்களுக்கு இறைவனது அருளை உணர ஏதேனும் ஒரு சார்பு நிலை அவசியமாக உள்ளது.

அதன் அடிப்படையில் உருவ வழிபாடு என்ற பூஜை என்பது ரிஷிகளால் பரிந்துரைக்கப்பட்ட வழிமுறையாக இருந்து வருகிறது. அவற்றை செய்வதற்கும் ஒழுங்கு முறைகளின் கீழ் அமைக்கப்பட்ட விதிகள், ஆகமங்கள் மூலம் வகுத்து அளிக்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் கவனிக்கும்போது தமது விருப்பத்திற்கு ஏற்றவாறு ஒருவர் வழிபாடுகளை செய்வது அனுமதிக்கப்படுவதில்லை. குறிப்பாக, வீடுகளில் செய்யப்படும் தனிப்பட்ட இஷ்ட தெய்வ பூஜை களுக்கும்கூட குறிப்பட்ட வழிமுறைகள் உள்ளன.

உருவம் மற்றும் பெயர் ஆகிய வரையறைகளுக்கு உட்பட்ட நிலையில் அமைந்த இவ்வுலக வாழ்க்கையில், மகத்தான சக்தியான உருவ மற்றை இறைவனை அணுக உருவ வழிபாடு அல்லது விக்கிரக ஆராதனை என்பது தவிர்க்க இயலாத அம்சமாகும். இறைவனை உருவங்கள் மூலம் வழிபடுவது தவறு என்று சொல்பவர்களு ம்கூட ஏதாவது ஒரு சின்னம் வடிவில் இறை நிலையை உருவகித்து பின்பற்ற வேண்டியதாக உள்ளது.

உருவ வழிபாட்டின் மூலம் ஐந்து புலன்களையும் ஒரு முகப்படுத்தி, இறை சக்தியிடம் எளிதாக அணுக முடிகிறது. அதன் அடிப்படையில் வைணவ சம்பிரதாயம் இறைவனின் சிலா ரூபங்களை, அர்ச்சாவதாரம் என்று குறிப்பிடுகிறது. அதன் பொருட்டு ஆலயங்கள் நிறுவப்பட்டு, அவற்றின் மூலம் பண்பாடு, கலைகள், வேதம், வேதாந்தம், இலக்கியம், மொழி போன்ற அனைத்து கலைகளையும் வளர்த்து வரக்கூடிய ஆன்மிக கல்வி நிலையங்களாகவும் ஆலயங்கள் இருந்து வந்தன.

அர்ச்சாவதாரம் என்று சொல்லப்படும் சிலா ரூபங்கள் வெறும் கல்லால் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் அவற்றிற்கு உயிர் உள்ளதாக ஐதீகம். உதாரணமாக குறிப்பிட்ட முன் தேதி இடப்பட்ட ஒரு காசோலையை வெறும் காகிதம் என்று யாரும் குறிப்பிடுவதில்லை. அதன் மதிப்பை சம்பந்தப்பட்டவர்கள் உணர்வதுபோல பக்தர்களும் கல்லால் செய்யப்பட்ட அர்ச்சாவதாரம் என்ற சிலா ரூபத்தை அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனின் திருவடிவமாகத்தான் கண்டு உணர்கிறார்கள்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)