Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிளிநொச்சியில் கடினப்பந்து ஆடுகளம் விமானப்படையினரால் அமைப்பு

In இலங்கை
Updated: 04:15 GMT, Jan 9, 2018 | Published: 04:15 GMT, Jan 9, 2018 |
0 Comments
1194
This post was written by : Varothayan

கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கடினப்பந்து ஆடுகளம் நேற்று (திங்கட்கிழமை) விமானப்படைத்தளத்தின் கட்டளை அதிகாரியால் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையில் கடந்த மாதம் வலயக்கல்வி திணைக்களத்தின் அனுசரணையுடன் அதிபரினதும் பழைய மாணவர்களதும் வேண்டுகோளுக்கு இணங்க கிளிநொச்சி மாவட்ட பாடசாலை துடுப்பாட்ட பயிற்சியாளரினால் முதல் தடவையாக கடினப்பந்து துடுப்பாட்ட பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.

அத்துடன் பாடசாலைக்கு இலங்கை துடுப்பாட்ட சபையின் துடுப்பாட்ட பயிற்சியாளர்களுக்கு பொறுப்பான முகாமையாளர், வடக்கு மாகாண துடுப்பாட்ட பயிற்சியாளர் விஜயம் செய்ததுடன் ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்களை வழங்கியிருந்தனர்.

கிளிநொச்சி மாவட்ட துடுப்பாட்ட சம்மேளனமும் ஒரு தொகுதி உபகரணங்கள் வழங்கியிருந்தனர். அவற்றை வைத்து பழைய மாணவர்களது உதவியுடன் மாவட்ட பாடசாலைப் பயிற்சியாளரினால் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது.

தற்போது ஆடுகளம் தேவைப்பட்ட நிலையில் இரணைமடு விமானப்படையினரால் சுமார் இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான சிறந்த ஆடுகளம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை விமானப் படைத்தளத்தின் கட்டளை அதிகாரி நாணயக்கார நேற்று பாடசாலை அதிபர் திரு எம்.சி.எல்.மனுவலிடம் கையளித்தார்.

IMG-8106a9501f76d0c856ea0e732207d56b-V IMG-a0e2bc4e12d41f2794fe34a2def87233-V IMG-c14d42a7a38b0878cbf78a00a9421c72-V IMG-cc67061bd0ea274f4356239e6c6630c1-V IMG-ef1c18a3ff0ea3d0e573c3dd7bdefa49-V

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg