Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய டெஸ்ட் தொடரிலிருந்து டேல் ஸ்டெய்ன் விலகல்

In கிாிக்கட்
Updated: 04:41 GMT, Jan 9, 2018 | Published: 04:40 GMT, Jan 9, 2018 |
0 Comments
1204
This post was written by : Elakkiya
i

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டித் தொடரின் கடைசி இரு போட்டிகளிலிருந்தும் தென் ஆபிரிக்க வீரர் டேல் ஸ்டெய்ன் விலகியுள்ளார்.

இவ்விரு அணிகளுக்கும் இடையில் கேப்டவுனில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் மூன்றாம்நாள் ஆட்டத்தின்போது இடது குதிக்காலில் காயமடைந்த ஸ்டெய்னுக்கு எதிர்வரும் ஆறுவாரங்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மீதமுள்ள இரு போட்டிகளிலும் டேல் ஸ்டெய்ன் விளையாட மாட்டார் என்று கூறப்படுகின்றது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஸ்டெய்ன், ” கடந்த இரு வாரங்களாக காலில் எடையை தாங்க முடியாதவாறு உள்ளது. அதனால் ஊன்றுகோல் பயன்படுத்துகின்றேன். இது மிகவும் மோசமாக உள்ளது. எனவே ஆறுவாரங்களுக்கு ஓய்வு எடுக்கபோகின்றேன். ஆறு வாரங்களில் நான் மீண்டு வருவேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்விரு அணிகளுக்கும் இடையில் கேப்டவுனில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 72 ஓட்டங்களால் தென்னாபிரிக்கா வெற்றிபெற்றது. இப்போட்டியில் டேல் ஸ்டெய்ன் 16 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டதுடன் 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தார். இரண்டாவது போட்டி எதிர்வரும் 13 ஆம் திகதி செஞ்சுரியனில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)