லண்டன் வர்ணப்பூச்சுத் தொழிற்சாலையில் தீ
வடக்கு லண்டனிலுள்ள வர்ணப்பூச்சுத் தொழிற்சாலையொன்றில் திடீரெனத் தீ பரவியதைத் தொடர்ந்து, தொழிற்சாலை அமைந்துள்ள பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன், தொழிற்சாலையை அண்டி வசிக்கும் மக்கள் தங்களது வீடுகளின் கதவுகள் மற்றும் யன்னல்களை மூடுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
லண்டனின் வோட்டர்லூ வீதியில் அமைந்துள்ள தொழிற்சாலையிலேயே, நேற்று (திங்கட்கிழமை) திடீரெனத் தீ பரவியது. தீ பரவுவதற்கு முன்னர் பாரிய வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், இதனையடுத்துத் தீ பரவியதாகவும், சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தீயணைப்புப் படை வீரர்கள் சுமார் 100 பேர் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டபோதும், அப்பகுதியில் ஒரே கரும்புகை மூட்டம் காணப்படும் நிலையில், பொதுமக்களுக்கு உரிய அதிகாரிகள் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளனர்.