Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாடாளுமன்ற விசேட அமர்வில் பிணைமுறி விவகாரம் விவாதிக்கப்படாது! (2ஆம் இணைப்பு)

In இலங்கை
Updated: 05:31 GMT, Jan 9, 2018 | Published: 05:31 GMT, Jan 9, 2018 |
0 Comments
1160
This post was written by : Risha

நாடாளுமன்றத்தில் நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ள விசேட அமர்வில் பிணைமுறி மோசடி குறித்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக விவாதிக்கப்படமாட்டாது என இன்றைய விசேட கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளைய நாடாளுமன்ற விசேட அமர்வில் பிணைமுறி குறித்த ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய விசேட அமர்வில் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும், அது தொடர்பான விவாதம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற விசேட அமர்விற்கு தயாராகும் கட்சித் தலைவர்கள்!

நாடாளுமன்ற விசேட அமர்வு தொடர்பாக விவாதிக்கும் வகையிலான விசேட கட்சி தலைவர்கள் கூட்டமொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.

நாளைய நாடாளுமன்ற விசேட அமர்வில் பிணைமுறி குறித்த ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, விவாதத்திற்கு ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் காலம் தொடர்பாக இன்றைய கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

2018ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வை 23ஆம் திகதி நடத்துவது என்றே தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால், சர்ச்சைக்குரிய பிணைமுறி மோசடி குறித்த ஆணைக்குழு அறிக்கை அண்மையில் வெளியானதை தொடர்ந்து அது தொடர்பாக விவாதிப்பதற்காக நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கூட்டுமாறு கோரப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன இக்கோரிக்கையை முன்வைத்திருந்த அதேவேளை, நாடாளுமன்றை உடனடியாகக் கூட்டுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபாநாயகரை கோரியிருந்தார்.

அதற்கமைய விசேட வர்த்தமானி அறிவித்தலின் நாளைய தினம் விசேட நாடாளுமன்ற அமர்வை நடத்த சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg