Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இங்கிலாந்து அணியில் மீண்டும் சர்ச்சை வீரர் பென் ஸ்டோக்ஸ்

In கிாிக்கட்
Updated: 05:03 GMT, Jan 9, 2018 | Published: 05:02 GMT, Jan 9, 2018 |
0 Comments
1205
icon_com
This post was written by : Elakkiya
skysports-ben-stokes-england_4161881

அவுஸ்ரேலியா மற்றும் நியூஸிலாந்தில் நடைபெறவுள்ள முத்தரப்பு ரி-20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் சகலதுறை ஆட்டவீரர் பென் ஸ்டோக்ஸ் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். எனினும் தொடரில் விளையாடுவது சந்தேகம் என்றே கூறப்படுகின்றது.

இரவு விடுதி ஒன்றில் இரசிகருடன் மோதலில் ஈடுபட்டதாக பென் ஸ்டோக்ஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஆஷஸ் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடரில் பென் ஸ்டோக்ஸ் விளையாடவில்லை.

ஆஷஸ் தொடரில் பென் ஸ்டோக்ஸ் இடம்பெற்றிருக்காதமையே இங்கிலாந்து அணியின் வெற்றி வாய்ப்பை பாதித்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள அவுஸ்ரேலியா, நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ரி-20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

எனினும் வழக்கு விசாரணையிலிருந்து பென் ஸ்டோக்ஸ் விடுவிக்கப்படும் பட்சத்தில் மேற்படி தொடரில் விளையாட முடியும் என்று இங்கிலாந்து கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.

இத் தொடருக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள இங்கிலாந்து அணி விபரம் வருமாறு, இயான் மோர்கன் சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், டாம் கரன், லியாம் டாவ்சன், அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் ஜோர்டான், டேவிட் மாலன், லியாம் பிளங்கெட், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் வின்ஸ், டேவிட் வில்லி, மார்க் வுட்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)