Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஜினியும், கமலும் எனது இரு கண்கள் – கவிஞர் வைரமுத்து

In சினிமா
Updated: 08:05 GMT, Jan 9, 2018 | Published: 05:05 GMT, Jan 9, 2018 |
0 Comments
1129
This post was written by : Arul Jesu

ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் எனது இரு கண்களைப் போன்றவர்கள் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

தென்காசியில் நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்ற ஆண்டாள்’ தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வைரமுத்து, அதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்.

இதற்கு பதிலளித்த கவிஞர் வைரமுத்து, ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் எனது நண்பர்கள். இவர்கள் இருவரும் எனது இரண்டு கண்கள் போன்றவர்கள். அவர்களை பற்றி கருத்துக்கூற ஏதுவான காலம் தற்போது இல்லை. இன்னும் காலம் வேண்டும். அதன்பிறகு சொல்கிறேன்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg