Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவிலிருந்து சல்வடோர் பிரஜைகளை வெளியேற்ற நடவடிக்கை

In
Updated: 05:35 GMT, Jan 9, 2018 | Published: 05:35 GMT, Jan 9, 2018 |
0 Comments
1254
This post was written by : Suganthini

அமெரிக்காவில் வசித்து மற்றும் பணியாற்றிவரும் எல் சல்வடோர் நாட்டைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் பேர், எதிர்வரும் 2019ஆம் ஆண்டு செப்டெம்பர் 9ஆம் திகதிக்குள் அமெரிக்காவிலிருந்து வெளியேற வேண்டுமென்று, ட்ரம்ப் நிர்வாகம்  நேற்று (திங்கட்கிழமை)  அறிவித்துள்ளது.

இக்கால அவகாசத்துக்குள் அவர்கள் வெளியேற வேண்டும். அவ்வாறு அமெரிக்காவிலிருந்து அவர்கள் வெளியேற விரும்பாவிடின், அமெரிக்காவில் தங்குவதற்கான சட்ட வழியை அவர்கள் நாட வேண்டும். இதையும் மீறி குறித்த கால அவகாசத்துக்குள் அவர்கள் வெளியேற பின்வாங்கும் பட்சத்தில், நாடு கடத்தப்படும் அபாயத்தை அவர்கள் எதிர்நோக்குவார்களெனவும், ட்ரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது.

கடந்த 2001ஆம் ஆண்டு மத்திய அமெரிக்காவில் ஏற்பட்டிருந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, எல் சல்வடோர் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மனிதாபிமான உதவியாக அமெரிக்காவில் வசிக்கவும் பணியாற்றவும் தற்காலிகத் தஞ்சக் கோரிக்கை வழங்கப்பட்டிருந்தது. இவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிகத் தஞ்சக் கோரிக்கை நேற்றுடன் காலாவதியான நிலையில், ட்ரம்ப் நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தற்போது இவர்கள் அமெரிக்காவில் வசிப்பதற்கும் பணியாற்றுவதற்குமான உரிமையை ரத்துச்செய்யவும், ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் 9ஆம் திகதிவரை அமெரிக்காவில் சல்வடோர் நாட்டைச் சேர்ந்தவர்கள் வசிப்பதற்கான அனுமதியளிக்க அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன் பின்னர், அவர்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேற வேண்டுமெனக் உள்நாட்டு பாதுகாப்புத் திணைக்களம் கூறியுள்ளது.

2001ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் விளைந்த அவல நிலை, தற்போது அந்நாட்டில் இல்லையெனவும், அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் திணைக்களம் கூறியுள்ளது.

இதேவேளை, தமது நாட்டினருக்கு அமெரிக்கா அளித்துவந்த தற்காலிக பாதுகாப்பு தஞ்சக் கோரிக்கையை நீடிக்கச் செய்ய எல் சல்வடோர் அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.

இவ்வாறான சூழ்நிலையில், அமெரிக்காவில் பிறந்து அந்நாட்டுக் குடியுரிமை பெற்ற  சல்வடோர் குழந்தைகள், இக்கட்டான நிலைமையை எதிர்நோக்கியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg