Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாலியல், பால்நிலை வன்முறையை வெளிப்படுத்தும் பணிகளுக்கு கனடா நிதியுதவி

In இலங்கை
Updated: 06:09 GMT, Jan 9, 2018 | Published: 05:49 GMT, Jan 9, 2018 |
0 Comments
1107
This post was written by : Varothayan
UNFPA-Canada-signing

இலங்கையில் பாலியல், பால்நிலை அடிப்படையிலான வன்முறையை வெளிப்படுத்தும் பணிகளுக்கு உதவ ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்திற்கு (UNFPA) கனடா 9 இலட்சம் கனேடிய டொலர்களை வழங்குகிறது.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் HE டேவிட் மக்கினன் மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் (UNFPA) இலங்கைப்பிரதிநிதி திருமதி. ரிட்சு நக்கேன் இருவரும் குறித்த நிதி வழங்கல் தொடர்பான உடன்படிக்கைக்கடிதத்தில் கையொப்பமிட்டனர்.

இந்த நிதியானது ‘பொது நிறுவனங்களில் இடம்பெறும் பாலியல், பால்நிலை அடிப்படையிலான வன்முறையை’ வெளிப்படுத்தும் 31 மார்ச் 2020 அளவில் செயற்படுத்தி முடிக்கும் ஒன்றுக்காக கனேடிய அரசால் UNFPA இலங்கைக்கு வழங்கப்படுகிறது.

இந்த செயற்றிட்டத்தின் நோக்கமானது பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரமும் உரிமைகளும் (SRHR) தொடர்பாகவும் இலங்கையில் பால்நிலை, பாலியல் அடிப்படையிலான வன்முறையை வெளிப்படுத்தும் பணிகளிலும் இலங்கை பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மற்றும் அதனோடு தொடர்புடைய ஏனைய அமைச்சுக்களை வலுப்படுத்துதல் ஆகும்.

SRHR ஐ வெளிப்படுத்தும் பணிகளில் முன்னிலை வகிக்கும் ஐநா நிறுவனமாகவும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கெதிரான தேசிய குழுமத்தின் தலைமைப்பொறுப்பை ஏற்றிருக்கும் நிறுவனமாகவும் UNFPA ஆனது இந்த செயற்றிட்டத்தை வெற்றிகரமாக அமுல்படுத்த உறுதி பூணுகிறது.

கனடாவின் பெண்ணியத்துக்கான சர்வதேச உதவிக்கொள்கைக்கு அமைவான 650 மில்லியன் கனேடிய டொலர்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ள செயற்றிட்டமான, SRHR க்கு நிதியுதவி செய்வதில் உலகம் முழுதும் உள்ள தடைகளை நீக்குதல் மற்றும் பெண்களை வலுப்படுத்தல், அவர்களின் அரசியல் பங்களிப்பு, பால்நிலை அடிப்படையிலான வன்முறையை இல்லாதொழித்தல் ஆகியவற்றில் இலங்கைக்கான கனடாவின் உதவியை தொடர்ச்சியாக வழங்குதல் என்பவற்றின் ஒரு பகுதியே UNFPA க்கான 9  இலட்சம் கனேடிய டொலர்கள் நிதி ஆகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)