Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசியலில் என்னை வளர்த்தவர் அண்ணன் கருணாநிதி: வைகோ நெகிழ்ச்சி!

In இந்தியா
Updated: 05:42 GMT, Jan 9, 2018 | Published: 05:42 GMT, Jan 9, 2018 |
0 Comments
1193
This post was written by : Kemasiya

அரசியலில் தன்னை வளர்த்துவிட்டவர்  அண்ணன் கருணாநிதி என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் வை. கோபாலசாமி  தெரிவித்துள்ளார்.

கருணாநிதியின் கோபாலபுர இல்லத்திற்கு நேற்று (திங்கட்கிழமை) மாலை ஸ்டாலினுடன் ஒரே காரில் விஜயம் செய்த வைகோஇ அங்கு 15 நிமிடங்களுக்கு மேல் கருணாநிதியுடன் சந்திப்பை மேற்கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரித்த போதே மேற்படி கூறியுள்ளார்.

‘நான் சென்றதும் அண்ணன் கருணாநிதி என்னைப் பார்த்து புன்னகைத்தார். அதன் பின்னர் சைகையினால் நான் வைகோ என்பதை தெரிவித்தார். அதன் போது தி.மு.க.விற்கு உறுதுணையாகவும்இ பக்கபலமாகவும் செயற்படுவதாக ம.தி.மு.க. முடிவு செய்துள்ளது என தெரிவித்துள்ளேன். அவர் மகிழ்ச்சியோடு தலையசைத்தார். அவருடனான இந்த சந்திப்பு ஒருவித நெகிழ்ச்சியாக உள்ளது’ என வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள ஸ்டாலின் வீட்டிற்கு நேற்று மாலை விஜயம் மேற்கொண்ட வைகோஇ அங்கு 1மணி நேரத்திற்கு மேல் ஸ்டாலினுடன் உரையாடிவிட்டுஇ பின்னர் அவருடனே ஒரே காரில் கருணாநிதியின் கோபாலபுர இல்லத்திற்கு விஜயம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 bnvhn

 

 

 

 

 

 

 

 

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg