Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழில் குழந்தை கைமாற்றப்பட்ட வழக்கு: விசாரணைகளை துரிதப்படுத்த உத்தரவு

In இலங்கை
Updated: 06:11 GMT, Jan 9, 2018 | Published: 06:00 GMT, Jan 9, 2018 |
0 Comments
1097
This post was written by : Varothayan
court-hammer

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை வேறொரு பெண்ணுக்கு வழங்கப்பட்டமை தொடர்பான வழக்கை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று நேற்று (திங்கட்கிழமை) உத்தரவிட்டது.

இவ்வழக்கு பற்றி மேலும் தெரியவருவதாவது, கடந்த 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தாயொருவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.

அன்றைய தினம் மற்றொரு பெண்ணும் குழந்தை பிரசவித்த போதும், அவரது சிசு இறந்துவிட்ட காரணத்தினால் வைத்தியசாலை உத்தியோகத்தர்களால் குறித்த இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை அந்தப் பெண்ணுக்கு மாற்றப்பட்டுவிட்டது என குறித்த தாயால் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர். விசாரணைகளை பொலிஸார் இழுத்தடித்தமையால் வழக்கு நீண்ட நாள்களாக கிடப்பில் போடப்பட்டது.

முறைப்பாட்டாளர் யாழ்ப்பாணத்தில் வசிக்கின்ற போதும், அவரால் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்ட மற்றைய பெண் வெளிநாட்டில் உள்ளார்.

யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்தி நீதிமன்றுக்கு அறிக்கை சமர்பிக்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு மன்று கட்டளையிட்டது.

அத்துடன், அதற்கான ஆலோசனைகளை வழங்க சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் மன்று அறிவித்தல் வழங்கியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)