Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீண்டும் மஹிந்தவின் விசுவாசியாகும் மேர்வின்

In இலங்கை
Updated: 06:48 GMT, Jan 9, 2018 | Published: 06:48 GMT, Jan 9, 2018 |
0 Comments
1118
This post was written by : Risha
mervin-silva-speaks-about-mahinda-rajapaksa1813460554

ராஜபக்ஷேக்கள் திருடர்கள் அல்ல என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார்.

மிக நீண்ட நாட்களுக்கு பின்னர் நேற்று (திங்கட்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் சொத்துக்களை விற்று மஹிந்த அரசியல் செய்ததாக தற்போதைய அரசு குற்றம் சாட்டி வருகின்ற நிலையில், அதனை நிராகரித்த மேர்வின், மஹிந்த சொந்த சொத்துகளைவிற்றே அரசியல் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாடுகள் மீது கொண்டுள்ள காதலால், நாட்டின் சொத்துக்களை அவர்களுக்கு விற்றுவருகிறது எனக் குறிப்பிட்டார்.

மஹிந்த ஆட்சிக் காலத்தில் மஹிந்தவின் விசுவாசியாக திகழ்ந்து, ஆட்சி மாற்றத்துடன் மைத்திரியின் விசுவாசியான மேர்வின், தற்போது மீண்டும் மஹிந்தவிற்கு சாதகமான கருத்துக்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)