Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ம.ம.மு. பெண் வேட்பாளரின் வீடு மீது கல்வீசித் தாக்குதல்?

In இலங்கை
Updated: 06:48 GMT, Jan 9, 2018 | Published: 06:44 GMT, Jan 9, 2018 |
0 Comments
1211
This post was written by : Varothayan

கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) மாலை மலையக மக்கள் முன்னணியைச் சேர்ந்த பெண் வேட்பாளர் ஒருவரின் வீடு கல்வீச்சுக்கு இலக்காகியுள்ளது. ஆனால், இத்தாக்குதல் குறித்து முன்னுக்குப் பின் முரணான தகவல்களே வெளியாகியுள்ளன.

பெண் வேட்பாளரின் வீட்டிற்கு அருகாமையில் உள்ள குடியிருப்புகளுக்கு இ.தொ.கா. ஆதரவாளர்கள் வாக்குகள் கேட்டு சென்றபோது தனது வீட்டிற்கு கல்லால் தாக்கினார்கள் எனவும், அந்நேரம் தான் தனிமையில் இருந்ததாகவும் கூறி பெண் வேட்பாளர் திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள், அவ்வாறான சம்பவம் ஒன்று நடக்கவில்லை. எமது வேட்பாளருக்கு ஆதரவு தேடி அப்பகுதிக்கு வீடு, வீடாகவே சென்றோமே தவிர இச்சம்பவம் தொடர்பில் குறித்த பெண் வேட்பாளர் பொய்யான முறைபாட்டை தம்மீது சுமத்துகின்றார் என தெரிவிக்கின்றனர்.

இருந்தபோதிலும் இது தொடர்பாக முறைப்பாடு செய்த பெண் வேட்பாளரிடம் வினவியபோது, நேற்று மாலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸை சார்ந்த சிலர் இப்பகுதிக்கு கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு தேடி வாக்குகளை கேட்டு வந்தார்கள்.

அச்சமயம் நான் தனிமையில் வீட்டில் இருந்தேன். எனது வீட்டிற்கு அருகில் வந்த இவர்கள் தகாத வார்த்தைகளால் என்னை திட்டி எனது வீட்டின் கதவை உடைத்தது மட்டுமின்றி வீட்டின் ஜன்னல்கள் போன்றவற்றையும் உடைத்து உள்ளே வர முயற்சித்தனர்.

இதன்போது நான் வீட்டின் சமயலறை பக்கமாக இருந்த கதவை திறந்து வெளியே சென்று விட்டேன் என்றார்.

இது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் குறித்த ஆண் வேட்பாளரிடம் வினவியபோது, தான் பிரசார நடவடிக்கைக்காக நேற்று மாலை எங்கும் செல்லவில்லை. தனது ஆதரவாளர்கள் கொமர்ஷல் பகுதியில் உள்ள வீடுகளுக்கு தனக்கு ஆதரவினை தேடி சென்றிருக்கலாம். ஆனால் இவ்வாறான சம்பவம் ஒன்று நடந்ததாக தனக்கு தெரியாது- என்றார்.

கொமர்ஷல் பகுதி மக்களின் ஆதரவினை தன்வசம் வைத்துக்கொள்ள இந்த பெண் வேட்பாளர் தனது வீட்டிற்கு தானே கல்லை அடித்துக்கொண்டு வேட்பாளரான என் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருக்கின்றமை வியப்புக்குரிய விடயமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எது எவ்வாறா இருந்தாலும், இச்சம்பவம் தொடர்பில் விசாரணையை மேற்கொள்ளும் திம்புள்ள பத்தனை பொலிஸார் எவரையும் இதுவரை கைது செய்யப்படவில்லை. சம்பவத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படும் இரு தரப்பினரும் பொலிஸ் விசாரணைக்காக வரவழைத்துள்ளதாக பொலிஸ் தரப்பினர் தெரிவித்தனர்.

DSC00332 DSC00334 DSC00335

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg