Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மூட நம்பிக்கைகளும் அறிவியலும்!

In ஆன்மீகம்
Updated: 06:49 GMT, Jan 9, 2018 | Published: 06:30 GMT, Jan 9, 2018 |
0 Comments
1471
This post was written by : Surenth

நமது முன்னோர்கள் நிறைய மூட நம்பிக்கைகளை கொண்டிருந்தார்கள் என்று பலர் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். மூடநம்பிக்கை என்று சொல்லப்படுகின்ற பல விடங்களை நாம் அறிவியலோடு ஒப்பிட்டு பார்க்கும் போது, அவை சாத்தியமான விடயங்களாகவே உள்ளன.

ஆரம்ப காலத்தில் அறிவியல் பற்றிய தெளிவு மக்களிடையே குறைவாகத்தான் இருந்தது. ஆனால் அவர்கள் நிறைய அனுபவம் வாய்ந்தவர்களாக இருந்தனர். தங்களின் அனுபவம் போன்றவற்றால் அவர்கள் கற்றுக்கொண்ட விடயங்களே அதிகமாக காணப்பட்டன.

நம் முன்னோர்கள் இரவில் மரத்தடியில் உறங்கக்கூடாது என்று சொல்வார்கள். இதற்கு காரணம் இரவில் மரங்கள் காபனீர் ஒக்சைட்டு என்ற கரியமில வாயுவை வெளியேற்றுவதால் அதை சுவாசிக்கும் போது உடல் நலம் கெடும் என்ற அறிவியலை உணர்ந்துதான் அவ்வாறு கூறியுள்ளனர். அவர்களுக்கு அறிவியல் அறிவை விட அனுபவ அறிவு அதிகமாக இருந்துள்ளது.

சூரிய மற்றும் சந்திர கிரகணத்தின் போது வெளியே வரக்கூடாது மற்றும் சாப்பிடக்கூடாது போன்ற நம்பிக்கைகளை அவர்கள் பின்பற்றினர். இவற்றை இப்பொழுது நாம் கடைப்பிடிப்பதே இல்லை. காரணமின்றி அவர்கள் இதனைக் குறிப்பிடவில்லை.

சூரிய மற்றும் சந்திர கிரகணம் போன்ற நாட்களில் வெளிப்படும் கதிர்வீச்சு நமது உடலை பாதிப்பதோடு கண் பார்வை குறைபாட்டையும் ஏற்படுத்துமாம். சூரியன் இல்லாத பூமி எப்படி இருக்குமென சிறிது சிந்தித்துப் பாருங்கள். பக்டீரியா, வைரஸ் போன்ற நோய்க் கிருமிகளின் ஆதிக்கத்துடனேயே காணப்படும். எனவேதான் கிரகணத்தின் போது சாப்பிடக் கூடாது என்றும் அதில் கிருமிகள் தொற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது என்பதற்காகவும் இதை கூறியுள்ளனர்.

மேலும், திருஷ்டிக்காக வீட்டின் நுழைவாயிலில் மிளகாய் மற்றும் தேசிக்காய் கொண்டு திருஷ்டி கயிறு கட்டி இருப்பர். மோலோட்டமாக இப்பொழுது பார்த்தால் இது ஒரு மூட நம்பிக்கை போல தோன்றும். ஆனால் இதன் அறிவியல் உண்மை சார்ந்தது.

எலுமிச்சை மற்றும் மிளகாய் இரண்டிலும் விட்டமின் சி அதிகமாக உள்ளன. அதனால் இவை இரண்டும் நோய்க்கிருமிகளை எதிர்த்து செயற்படக் கூடியன. எனவே வீட்டை எந்த நோய்களும் அண்டாமல் இருக்கவும், இந்த பொருட்களை உணவில் அதிகமாக பயன்படுத்த வலியுறுத்தியும் முன்னோர்கள் இதைச் செய்தனர்.

ஏணிக்கு அருகில் போகக் கூடாதென எதற்காக சொல்கின்றார்கள் தெரியுமா? சில சமயங்களில் ஏணி சாய்ந்து ஏதாவது விபத்து ஏற்படலாம். இதனால் நாம் காயமடையக் கூடும். அதனால்தான் ஏணிக்கு அருகில் செல்லக் கூடாது என்று கூறியுள்ளனர்.

நாம் கோயிலுக்கு செல்லும் போதும் பூஜை நேரங்களிலும் மணி அடிக்கப்படும்.இதற்கும் காரணம் உண்டு. நமது முன்னோர்கள் பழங்காலத்தில் கோயில் மணியை காட்மியம், ஜிங்க், காரீயம், தாமிரம், குரோமியம் மற்றும் மக்னீசியம் போன்ற உலோகங்களால் வடிவமைத்தனர். இந்த உலோகங்களுக்கு ஒரு சக்தி இருக்கிறது. இவை நம்மை சுற்றியுள்ள நேர்மறை ஆற்றலை இழுத்து நம் மூளையில் நேர்மறை எண்ணங்களை தூண்டச் செய்கிறது. இந்த மணி ஒலி நமது மூளையில் ஏழு நிமிடங்கள் நிலைத்து நமது உடலில் உள்ள ஏழு சக்கரங்களையும் ஒருங்கிணைத்து மூளையின் சிந்தனையை ஒருமுகப்படுத்துகிறது.

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் இறப்பு என்பது நிச்சயிக்கப்பட்டதாகும். ஆனால் இறப்பு என்பது இயற்கையாகவோ, நோய்வாய்ப்பட்டோ அல்லது விபத்திலோ நடக்கலாம். இப்படி நடக்கும் ஒருவரின் இறந்த உடலை காணச் செல்லும் போது நமக்கும் நோய்க் கிருமிகளின் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவேதான் இறப்பிற்கு சென்று வந்த பின் குளிக்க வேண்டும் என்ற சம்பிராயத்தை மக்கள் கடைப்பிடித்து வந்துள்ளனர்

நமது இந்து மதத்தில் துளசி இலை கடவுளின் புனிதமான ஒரு வழிபாட்டு பொருளாக கருதப்படுகிறது. மேலும் அவை நிறைய மருத்துவ குணங்கள் வாய்ந்ததாகவும் உள்ளன. அப்படிப்பட்ட துளசி இலைகளை நாம் விழுங்கலாம். ஆனால் மென்று உண்ணக் கூடாது. ஏனெனில் இந்த துளசி இலைகளில் மெர்குரி என்ற பொருள் அதிகமாக இருப்பதால் இவை நமது பற்களை சேதப்படுத்த வாய்ப்புள்ளது. இந்த உண்மையை அறிந்துதான் நம் முன்னோர்கள் துளசியை மென்று உண்ணக்கூடாதென அறிவுறுத்தியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg