Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனடாவில் வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வு!

In கனடா
Updated: 07:33 GMT, Jan 9, 2018 | Published: 06:58 GMT, Jan 9, 2018 |
0 Comments
1086
This post was written by : Vithushagan

கனடா – ஒட்டாவா பகுதியில் கடந்த 40 வருடங்களுக்கு பின்னர், வேலையில்லாப் பிரச்சினை பாரிய அளவு குறைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதன்படி 2002ஆம் ஆண்டிலிருந்து காணப்படாத வகையிலான வேலைவாய்ப்பு கடந்த வருடம் முதல் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கடந்த 2016ஆம் ஆண்டு வேலையின்மை பிரச்சினையானது 6.9 சதவீதத்தால் காணப்பட்டுள்ளது எனவும் கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் இது 5.8 சதவீதமாக குறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று 2017ஆம் ஆண்டு புதிய தொழிற்சாலைகள் 3.5 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும், கடந்த வருடம் 422,500 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் புள்ளிவிபர அறிக்கைகள் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் 25 தொடக்கம் 54 வயதுக்கு உட்பட்டவர்களின் வேலைவாய்ப்பு வீதமானது 1.6 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது எனவும், கடந்த மாதம் 23,700 முழுநேர புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg