Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரோஹிங்கியர் – பங்களாதேஷ் பிரஜைகள் திருமணத்துக்குத் தடை: நீதிமன்ற உத்தரவு

In உலகம்
Published: 06:55 GMT, Jan 9, 2018 |
0 Comments
1113
This post was written by : Suganthini
rohi

ரோஹிங்கியா அகதிகளும் தமது நாட்டுப் பிரஜைகளும் திருமணம் செய்துகொள்வதைத் தடைசெய்வது தொடர்பான சட்டத்தை நடைமுறைப்படுத்த பங்களாதேஷ் உயர் நீதிமன்றம் நேற்று (திங்கட்கிழமை) உத்தரவிட்டுள்ளது.

பங்களாதேஷில் குடியுரிமை பெற்றுக்கொள்வதை நோக்காகக் கொண்டு, ரோஹிங்கியா அகதிகளும் பங்களாதேஷ் பிரஜைகளும் திருமணம் செய்யக்கூடாதென, நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமது நாட்டில் ரோஹிங்கியர்கள் குடியுரிமை பெற்றுக்கொள்வதைத் தடுக்கும் வகையில், கடந்த 2014ஆம் ஆண்டு பங்களாதேஷ் இந்தச் சட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷில் கடந்த செப்டெம்பரில் நடைபெற்ற முஸ்லிம் நிகழ்ச்சியொன்றின்போது, ரோஹிங்கியா சமூகத்தைச் சேர்ந்த 18 வயதுடைய பெண்ணொருவரை, பங்களாதேஷைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரொருவர் திருமணம் செய்தமை தொடர்பாக, அவ்விளைஞனின் தந்தை நீதிமன்றத்தில் கடந்த வருடம் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், தந்தை செய்த மனுவை நிராகரித்ததுடன், அவர்களுக்கு அபாரதம் செலுத்தவும் உத்தரவிட்டது.

இவ்வாறான சூழ்நிலையிலேயே, ரோஹிங்கியா அகதிகளும் பங்களாதேஷ் பிரஜைகளும் திருமணம் செய்துகொள்வதைத் தடுக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், மியன்மாரின் ராஹினி மாநிலத்தில கடந்த ஓகஸ்ட் மாத இறுதியிலிருந்து நிலவிய வன்முறை காரணமாக பங்களாதேஷில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் சுமார் 6 லட்சம் பேர் தஞ்சம் கோரியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)