Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இணைந்த வடகிழக்கை ஏற்றிருந்தால் பேரவலத்தை தவிர்த்திருக்கலாம்: பிரசாந்தன்

In இலங்கை
Updated: 08:03 GMT, Jan 9, 2018 | Published: 08:03 GMT, Jan 9, 2018 |
0 Comments
1234
This post was written by : Varothayan

வடகிழக்கினை இணைத்து மாகாணசபை உருவாக்கப்பட்டபோது அதனை ஏற்றுக்கொண்டிருந்தால் முள்ளிவாய்க்கால் பேரவலம் ஏற்பட்டிருக்காது என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பி.பிரசாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு கோட்டைக்கல்லாறு வட்டாரத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் த.சுதாகரனை ஆதரித்து பிரசாரக்கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதில், பிரசாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். சிறப்பு அதிதிகளாக கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் ரி.சிவநேசன், கட்சியின் மகளிர் அணித்தலைவி திருமதி செல்வி மனோகர், கட்சியின் இளைஞர் அணி தலைவர் சந்துரு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய பி.பிரசாந்தன், “உள்ளுராட்சிமன்ற தேர்தல் அரசியல் கட்சிகளின் பலத்தினை காட்டும் தேர்தல் அல்ல. கிழக்கில் தமிழர்களின் இருப்பினை தீர்மானிக்கின்ற தேர்தலாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் தமிழர்களின் காணிகள் கபளீகரம் செய்யப்படுகின்றன. எல்லைகள் பறிக்கப்படுகின்றன. நிர்வாகங்கள் முடக்கப்படுகின்றது. தமிழன் ஆண்ட மாகாண சபையினை மாற்று சமூகம் ஆண்டு கொண்டுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி என்ன செய்தது என்று கேட்பதற்கு அப்பால், நாங்கள் 62 வருடங்களாக வாக்களித்த கட்சி எங்களுக்கு என்ன செய்துள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

எந்த போராட்டத்தினையும் வலியையும் சந்திக்காத சுமந்திரன் அரசாங்கம் தருவதை பெற்றுக்கொள்வோம் என்று இப்போது சொல்கின்றார். இந்த கருத்தினை 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானம் எடுப்பதற்கு முன்பாக சொல்லியிருந்தால் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திய நிலை வந்திருக்காது.

வடகிழக்கினை இணைத்து மாகாணசபை உருவாக்கப்பட்டபோது ஏற்றுக்கொண்டிருந்தால் முள்ளிவாய்க்கால் பேரவலம் ஏற்பட்டிருக்காது. அன்றெல்லாம் நாங்கள் தமிழீழமே தீர்வென்று கூறிவிட்டு, அப்பாவி இளைஞர்களை போர்க்களத்தில் பலியாக்கி அவர்களின் சமாதிகளில் நின்று அரசியல் செய்துகொண்டு, கொழும்பில் தூங்கிக்கொண்டு இப்போது எதைத்தந்தாலும் வாங்கிக்கொள்வோம் என்று சொல்லும் நீங்கள், இதனையே நாளை உள்ளுராட்சிமன்றத்திலும் சொல்லப்போகின்றீர்கள்’ என்றார்.

DSC08712 DSC08715 DSC08716 DSC08717

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg