Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முத்தரப்பு தொடருக்கான இலங்கை அணியில் அறிமுக வீரர் ஷேஹன் மதுஷங்க

In கிாிக்கட்
Updated: 08:55 GMT, Jan 9, 2018 | Published: 07:57 GMT, Jan 9, 2018 |
0 Comments
1702
This post was written by : Elakkiya
DTFeZPRW0AAguey

இலங்கை, சிம்பாப்வே மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஷேஹன் மதுஷங்கவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர் தவிர, தினேஷ் சந்திமல், குசல் மென்டிஸ், வனித்து ஹஸரங்கவும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

22 வயதான மதுஷஙக்க முதல்தர போட்டிகள் மூன்றில் மாத்திரமே இதுவரை விளையாடியுள்ளார் என்கின்ற போதிலும் அவருடைய வேகப்பந்து வீச்சை அடிப்படையாக கொண்டு இலங்கை அணியில் இடம்பிடித்துள்ளார். இத்தொடருக்கான இலங்கை அணியில் துஷ்மந்த சமீரவும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் இலங்கை அணி களமிறங்கவுள்ளது.

எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இத் தொடருக்கான இலங்கை அணி விபரம் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கட் போட்டிகளுக்கான அணித்தலைவர் மெத்தியூஸ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் தொடருக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள இலங்கை அணி விபரம் வருமாறு:

Angelo Mathews (capt), Upul Tharanga, Danushka Gunathilaka, Kusal Mendis, Dinesh Chandimal, Kusal Perera, Thisara Perera, Asela Gunaratne, Niroshan Dickwella, Suranga Lakmal, Nuwan Pradeep, Dushmantha Chameera, Shehan Madushanka, Akila Dananjaya, Lakshan Sandakan, Wanindu Hasaranga.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)