Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

2019 உடன் பதவியிலிருந்து விலகுவதாக டிரெவர் பேலிஸ் அறிவிப்பு

In கிாிக்கட்
Updated: 09:31 GMT, Jan 9, 2018 | Published: 08:18 GMT, Jan 9, 2018 |
0 Comments
1153
This post was written by : Elakkiya
trevor-bayliss

எதிர்வரும் 2019 ஆம் ஆண்டுடன் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக டிரெவர் பேலிஸ் உறுதிப்படுத்தியுள்ளார். எதிர்வரும் 2019 ஆம் ஆண்டுடன் அவருடைய பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில் அதன் பின்னர் பதவிக் காலத்தை நீடிக்க விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்ரேலிய அணியுடன் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கட் தொடர் தோல்வியை அடுத்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ” கடந்த 12 மாதங்களுக்கு முன்னரே இங்கிலாந்து கிரிக்கட் சபையிடம் எனது பதவி தொடர்பாக கூறிவிட்டேன். நான் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக எதிலும் நீடிப்பதில்லை. எனவே மாற்றத்திற்கான நேரத்தை நான் இப்போது உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக கடந்த 2015 ஆம் ஆண்டு டிரெவர் பேலிஸ் பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)