Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பிய ஒன்றிய குடியேற்றவாசிகள் 140 பேர் மீட்பு

In
Updated: 08:03 GMT, Jan 9, 2018 | Published: 08:03 GMT, Jan 9, 2018 |
0 Comments
1160
This post was written by : Suganthini

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு தஞ்சக் கோரிக்கையை முன்வைத்து ஆபத்தான கடற்பயணத்தை மேற்கொண்ட 140 பேர் நேற்று (திங்கட்கிழமை) பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக, லிபிய கரையோர காவல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ஆபிரிக்கக் புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த படகொன்று, திரிபோலியின் கார்பலி (Garbulli)) நகர் கடற்பரப்பில் மூழ்கத் தொடங்கியமை தொடர்பாகத் தமக்குத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, குறித்த இடத்துக்குச் சென்று புகலிடக் கோரிக்கையாளர்கள் காப்பாற்றப்பட்டு, திரிபோலி கடற்படைத் தளத்துக்கு அழைத்துவரப்பட்டதுடன், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டதாகவும், அவர்கள் கூறியுள்ளனர்.

இவ்வாறிருக்க, லிபியாவில் கடந்த வாரம் புகலிடக் கோரிக்கையாளர்களின் படகொன்று மூழ்கியதில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 12க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது. இது இந்த வருடத்தின் முதலாவது சம்பவமாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg