Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிணைமுறி மோசடி: ஜி.எல். பீரிஸ் மீது டிலான் சாடல்

In இலங்கை
Updated: 08:29 GMT, Jan 9, 2018 | Published: 08:22 GMT, Jan 9, 2018 |
0 Comments
1165
This post was written by : Risha

பிணைமுறி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள 34 குற்றச்சாட்டுகளின் 32இல், ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தொடர்புபட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஹாலி-எல பட்டிபொல பிரதேசத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியை அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என வர்ணித்த அவர், அவ்வாறானவர்களுக்கு தேர்தலில் ஆதரவளிக்க முடியாத என்றும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், கட்சி பேதமின்றி மோசடிக்காரர்களுக்கு தண்டனை வழங்கும் உன்னத கட்சியாக எஞ்சியிருப்பது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான கூட்டமைப்பு ஒன்றே.

அதன்படி, நீதிக்காக உழைக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை மக்கள் ஆதரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg