திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்கு முதலீட்டாளர்களின் ஒத்துழைப்பு அவசியம்: ரிஷாட்
சகல வளங்களும் கொண்ட திருகோணமலை மாவட்டம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இதற்கு முதலீட்டாளர்களின் ஒத்துழைப்பு அவசியம் என வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
நேற்று (திங்கட்கிழமை) திருகோணமலை வர்த்தக கைத்தொழில் சம்மேளன அலுவலகத்திற்கு விஜயம் செய்து கைத்தொழில் முதலீட்டாளர்களைச் சந்தித்து அவர்களின் குறை நிறைகளைக் கேட்டறிந்த அமைச்சர், அங்கு இவ்வாறு கூறினார்.
திருகோணமலை வர்த்தக கைத்தொழில் சம்மேளத்தின் தலைவர் க.குலதீபன் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.மகரூப் அவர்களும் கலந்து கொண்டார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், எனது விஜயம் அரசியல் விஜயமாக இருந்தாலும், கைத்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சிகைள் பற்றி கேட்டறிய வேண்டிய தேவை எனக்கு உள்ளது. தேர்தல் முடிவடைந்ததுதம் உங்களது குறைகள் தீர்க்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தல் முடிவடைந்ததும் நிதிநிறுவங்களின் பிரதானிகளை அழைத்து உங்களுடன் ஒரு சந்திப்புக்கு வழி ஏற்படுத்தித்தரப்படும் என்று குறிப்பிட்டார்.
இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு திருகோணமலை சென்ற அமைச்சர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மூதூர் புல்மோட்டை, கிண்ணியா பிரதேசங்களில் அரசியல் கூட்டங்களில் பங்கு கொண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பங்கு கொள்ளும் கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.