Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய அணியுடனான இரண்டாவது டெஸ்ட்: தென்னாபிரிக்க அணியில் அறிமுக வீரர்

In கிாிக்கட்
Updated: 09:25 GMT, Jan 9, 2018 | Published: 09:24 GMT, Jan 9, 2018 |
0 Comments
1922
This post was written by : Elakkiya

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான தென்னாபிரிக்க அணியில் வேகப்பந்து வீச்சாளர் டியுயன்னே ஒலிவியர் ( Duanne Olivier) மற்றும் அறிமுக வீரர் லோங்கி நெஹிடி ( Lungi Ngidi) ஆகியோர் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது காலில் காயமடைந்த டேல் ஸ்டெய்ன் தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில் அணியில் மேற்படி மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஒலிவியர் கடந்த 2017 ஆம் ஆண்டில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இறுதியாக கடந்த செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதம் நடைபெற்ற பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் பங்கேற்றிருந்தார்.

அதேவேளை நெஹிடி கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ரி-ருவென்ரி போட்டியில் அறிமுகமாகியிருந்தார். எனினும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை அவர் விளையாடவில்லை.

எதிர்வரும் 13 ஆம் திகதி செஞ்சூரியனில் ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள தென்னாபிரிக்க அணி விபரம் வருமாறு:

 Faf du Plessis (capt), Hashim Amla, Temba Bavuma, Theunis de Bruyn, Quinton de Kock (wk), AB de Villiers, Dean Elgar, Keshav Maharaj, Aiden Markram, Morne Morkel, Chris Morris, Andile Phehlukwayo, Vernon Philander, Kagiso Rabada.

 

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg