Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துருக்கியில் அவசரகாலநிலை நீடிப்பு

In
Updated: 08:44 GMT, Jan 9, 2018 | Published: 08:44 GMT, Jan 9, 2018 |
0 Comments
1137
This post was written by : Suganthini

கடந்த 2016ஆம் ஆண்டு துருக்கியில் இடம்பெற்ற ஆட்சிக்கவிழ்பைத் தொடர்ந்து, அந்நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரகால நிலைமை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்படுவதாக, துணைப் பிரதமர் பேக்கீர் போஷ்டக் (Bekir Bozdag ) அறிவித்துள்ளார்.

துருக்கியில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே, இது தொடர்பான அறிவிப்பை துணைப் பிரதமர் வெளியிட்டுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு துருக்கியில் முன்னெடுக்கப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியைத் தொடர்ந்து, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர். அத்துடன், பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றிவந்த ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களில் பலர் பணியிலிருந்து நீக்கப்பட்டும் பலர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுமுள்ளனர்.

துருக்கியில் முன்னெடுக்கப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்புத் தொடர்பாக, அமெரிக்காவைச் சேர்ந்த மதகுருவான ஃபெத்துல்லா குலென்(Fethullah Gulen) தொடர்புபட்டுள்ளதாக துருக்கி குற்றஞ்சாட்டியுள்ளது. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டை குலென் மறுத்துள்ளார்.

ஆட்சிக்கவிழ்ப்புடன் தொடர்புடைய குற்றவாளிகளை துருக்கியிலிருந்து வெளியேற்றும்வரை, துருக்கி பாதுகாப்புச் சவால்களை எதிர்நோக்கியுள்ளதாக, துருக்கிய அரசாங்கம் கூறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg