Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எகிப்தில் ஜனாதிபதித் தேர்தல்

In உலகம்
Updated: 09:03 GMT, Jan 9, 2018 | Published: 09:03 GMT, Jan 9, 2018 |
0 Comments
1290
This post was written by : Suganthini

எகிப்தில் எதிர்வரும் மார்ச் 26ஆம் திகதி முதல் 28ஆம் திகதிவரை ஜனாதிபதித் தேர்தல் நடத்த, அந்நாட்டுத் தேர்தல்கள் ஆணையகம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான ஊடகவியலாளர்கள் சந்திப்பு எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றபோதே, தேர்தல்கள் ஆணையகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது வேட்புமனுக்களை இம்மாதம் 20ஆம் திகதி முதல் 29ஆம் திகதிவரை தேர்தல்கள் ஆணையகத்திடம் சமர்ப்பிக்க முடியுமென்பதுடன், உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் எதிர்வரும் ஏப்ரல் 2ஆம் திகதி அறிவிக்கப்படுமெனவும், தேர்தல்கள் ஆணையகம் கூறியுள்ளது.

இதேவேளை, எகிப்தின் தற்போதைய ஜனாதிபதியான அப்தெல் ஃபத்தாஹ் அல் சிசி( Abdel Fattah al-Sisi ) இந்தத் தேர்தலில் இரண்டாவது தடவையாகவும் போட்டியிட எதிர்பார்த்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg