Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்

In இந்தியா
Published: 09:51 GMT, Jan 9, 2018 |
0 Comments
1124
This post was written by : Kemasiya

தனுஸ்கோடி மற்றும் கச்சதீவுக்கு இடைப்பட்ட பகுதியில் தொழிலில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நேற்று (திங்கட்கிழமை) குறித்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ராமேஸ்வர மீனவர்கள் மீது போத்தல்கள் மற்றும் கற்கள் கொண்டு இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனால் 50க்கும் மேற்பட்ட படகுகளின் வலைகள் சேதமடைந்துள்ளதாகவும், மொத்தமாக 20ஆயிரம் முதல் 50ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரிவித்த மீனவர்கள்,

“நேற்றைய தினம் மிக குறைந்த படகுகளில் தான் கடலுக்கு சென்றோம். அப்படியிருந்தும் படையினர் எல்லையை நெருங்க விடுகிறார்கள் இல்லை. எங்களை பார்த்து கேலியாக சிரித்தபடி தாக்குதல் நடத்துகின்றனர். எமது வாழ்வாதாரம் என்ன ஆகும் என்பதே கேள்விக்குறியாகவுள்ளது. இந்த விடயத்தில் மத்திய அரசு தலையிட்டு எமது வாழ்வாதாரத்திற்கு வழிசெய்து தரவேண்டும்.” எனத் தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று சட்டசபைக் கூட்டத்தில் உரையாற்றும் போது, “இந்திய மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் குறைந்துள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

அவர் மேற்படி தெரிவித்து சிலமணி நேரத்தில் இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

xbfxfbgv ghjhj

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)