Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலய மாணவர்களுக்கு மைத்திரி பாராட்டு

In இலங்கை
Updated: 09:49 GMT, Jan 9, 2018 | Published: 09:33 GMT, Jan 9, 2018 |
0 Comments
1133
This post was written by : Risha
03e-1

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் விசேட திறமைகளை வெளிக்காட்டிய மாத்தறை, சுஜாதா வித்தியாலயம் மற்றும் மாத்தறை மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தின் மாணவ மாணவியருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராட்டு தெரிவித்தார்.

குறித்த மாணவர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.

இதன்போது மாணவர்களின் திறமைகளை பாராட்டிய ஜனாதிபதி, அவர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், அவர்களது எதிர்கால கல்வி நடவடிக்கைகள் வெற்றியடைய ஆசீர்வாதம் வழங்கியதுடன், மாணவர்களுக்கான பரிசில்களையும் வழங்கினார்.

அத்துடன், குறித்த பாடசாலைகளில் சேவையாற்றும் அதிபர்கள், ஆசிரியர்களின் சேவையையும் ஜனாதிபதி பாராட்டினார்.

இதன்போது, அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன மற்றும் குறித்த மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்ட பலரும் வருகைத்தந்திருந்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)