Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீமானின் கேள்விக்கு நாமல் பதிலடி

In இந்தியா
Published: 10:21 GMT, Jan 9, 2018 |
0 Comments
1644
icon_com
This post was written by : Kemasiya
bcnbbbbb

இலங்கைத் தமிழர் விவகாரத்தை சீமான் தனது சுயநல அரசியலுக்காகவே பயன்படுத்துகிறார் என நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

நாமல் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவின் மூலமே மேற்படி தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்திருந்தமைக்கு நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் மூலம் வாழ்த்து கூறியிருந்தார்.

இந்நிலையில் கடந்த 6ஆம் திகதி இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் செவ்வி வழங்கிய சீமான் “இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல்ராஜபக்ஷ ரஜினிக்கு வாழ்த்து கூற வேண்டியதன் அவசியம் என்ன” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் அவரின் கேள்விக்கு பதில் வழங்கும் முகமாகவே நாமல் மேற்படி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)