Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிங்கள தலைவர்கள் எங்களைப் போராட வைத்திருப்பார்கள்: சி.வி.

In இலங்கை
Updated: 12:46 GMT, Jan 9, 2018 | Published: 10:42 GMT, Jan 9, 2018 |
0 Comments
1183
This post was written by : Varothayan
wigneswaran

நாங்கள் போராடாதிருந்தாலும் சிங்கள மக்களின் தலைவர்கள் எங்களைப் போராட வைத்திருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் மனதில் சில எதிர்பார்ப்புக்கள் இருந்து வந்துள்ளன.

தமிழ் மக்களின் செல்வாக்கு, கலை, கலாசார, பாரம்பரியங்களை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் இருந்தது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

’70 வருட கால அரசியல் போராட்டத்தில் நாம் (தமிழர் தரப்பு) எதைக் கண்டோம்?’ என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். முதலமைச்சரிடம் வாரம் ஒரு கேள்வி என்ற வகையில், இந்த வாரம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே முதல்வர் இதனைக் கூறினார்.

அப்பதிலில் அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியல் போராட்டங்களால் நாம் பலதைக் கண்டுவிட்டோம். முதலாவது எமது இளைஞர்களின் துணிச்சல், விவேகம், ஈடுபாடு போன்றவை உலகறியச் செய்யப்பட்டுள்ளன. இரண்டாவது இலங்கையினுள் முடங்கிக் கிடக்க வேண்டிய தமிழ் மக்கள் உலகெல்லாம் இன்று பரந்து கிடக்கின்றார்கள்.

மூன்றாவது பரந்து கிடக்கும் எம்மவரில் பலர் உலகத்தில் பல துறைகளில் மேம்பட்ட பிற நாட்டவர்களை விஞ்சியவர்களாகப் பவனிவரக்கூடியதாக உள்ளது. நான்காவது அவர்களுள் பலர் பொருளாதார ரீதியாக உச்சக்கட்டத்தில் இருக்கின்றார்கள். ஐந்தாவது அவர்கள் வசிக்கும் அந்தந்த நாடுகளின் அதிகார வர்க்கத்துடன் எம்மவர் கிட்டிய உறவினைப் பேணி வருகின்றனர்.

ஆறாவது சர்வதேச ரீதியாக எமது இனம் மனச்சாட்சிக்குக் கட்டுப்பட்ட கடமையுணர்வுள்ள ஒரு இனம் என அடையாளம் காணப்படுள்ளது. ஏழாவது எமது பிரச்சனைகள் உலகறியச் செய்யப்பட்டுள்ளன. இங்கு நடக்கும் அட்டூழியங்கள் உலகறியச் செய்யப்பட்டுள்ளன. போர்க் குற்றங்கள் உலக அரங்கில் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

நீங்கள் எதைப் பெற்றுவிட்டோம் என்று கேட்கும் போது உங்கள் அங்கலாய்ப்பு நிலை புரிகிறது. நாம் போராடாதிருந்தால் எவ்வளவோ பெற்றிருக்க முடியும் என்று கூறுவது போல்த் தெரிகிறது. நாங்கள் போராடாதிருந்தாலும் சிங்கள மக்கட் தலைவர்கள் எங்களைப் போராட வைத்திருப்பார்கள். ஏன் என்றால் அவர்கள் மனதில் சில எதிர்பார்ப்புக்கள் இருந்து வந்துள்ளன.

முன்னர் தமிழ் மக்களின் செல்வாக்கைக் குறைக்க வேண்டும் என்று எழுந்த சிங்கள வைராக்கியம் பின்னர் அதற்கும் அப்பால் சென்றுள்ளதை நாம் அவதானிக்க வேண்டும்.

தமிழர்கள் தமது அரசாங்க வேலைகளை எடுத்துவிட்டார்கள், அளவுக்கதிகமாக அவர்களின் செல்வாக்கு நாட்டில் பரவியுள்ளது அதைக் குறைக்க வேண்டும் என்று தொடங்கியவர்கள் பின்னர் எமது கலை, கலாச்சார, பாரம்பரியங்களை அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்ப்படத் தொடங்கினார்கள் – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)