Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘பாட் மன்’ என்ற பெயரில் பொலிவூட் திரைப்படமானது தமிழர் கதை

In சினிமா
Updated: 12:26 GMT, Jan 9, 2018 | Published: 10:31 GMT, Jan 9, 2018 |
0 Comments
1182
This post was written by : Arul Jesu

பிரபல தமிழ் கண்டுபிடிப்பாளர் அருணாச்சலம் முருகானந்தம் என்பவரின் வரலாற்றுக் கதையை மையப்படுத்தி உருவாகியுள்ள பொலிவுட் திரைப்படமான ‘பாட் மன்’ (PAD MAN) இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு இம்மாதம 25ஆம் திகதி வெளிவரவிருக்கிறது.

அக்ஷய் குமார், சோனம் கபூர், ராதிகா ஆப்தே நடித்துள்ள இத்திரைப்படத்தை ஆர்.பால்கி இயக்கியுள்ளார். அமிட் இசையமைத்துள்ள இந்தப்படத்தை கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

‘இந்தியாவின் அணையாடை மனிதர்’ என்றழைக்கப்படும் கண்டுபிடிப்பாளரான கோவையைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவர் சிற்றூர்களில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் கடைப்பிடிக்கும் சுகாதாரமற்ற தூய்மைக்குறைவான செயல்முறைகளை மாற்ற முனைந்து மலிவான அணையாடைகளைத் தாயரிக்கும் நோக்கில் புதிய இயந்திரமொன்றைக் கண்டுபிடித்தார்.

இந்த புதிய இயந்திரத்தால் பன்னாட்டு நிறவனங்கள் தயாரிக்கும் அணையாடைகளை விட மிகக் குறைந்த விலையில் சுகாதராமான அணையாடைகளை உற்பத்தி செய்து அதற்கான காப்புரிமையும் பெற்றார்.

இதன் மூலம் பிரபலமடைந்து இந்தியாவின் ‘பாட் மன்’ என்ற பெயரைப்பெற்றார். அத்தோடு ‘ஜெயஸ்ரீ இன்டஸ் ரீஸ்’ என்ற நிறுவனத்தை நிறுவி அணையாடைகளை தயாரித்து ஏழை மக்களுக்கு விற்பனைசெய்து வருகின்றார்.

மேலும் இவரின் சேவை மனப்பான்மையைப் பாராட்டுமுகமாக இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. மற்றும் அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ‘டைமஸ்’ வார இதழ், உலகில் அதிக செல்வாக்கு மிக்க மனிதர்கள் பட்டியலில் இவரை இணைத்துள்ளது.

இவ்வாறு பிரபலமைந்த தமிழ் கண்டுபிடிப்பாளரின் வாழ்க்கை வரலாற்றுக் கதையை எடுத்து பொலிவூட்டில் படமாக்கியுள்ளார் இயக்குநர் ஆர்.பால்கி.
இது தமிழர்கள் பெருமைப்படவேண்டிய விடயமாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg