Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தாய்லாந்துப் பிரதமரின் புதிய தந்திரோபாயம்

In உலகம்
Updated: 10:32 GMT, Jan 9, 2018 | Published: 10:32 GMT, Jan 9, 2018 |
0 Comments
1243
This post was written by : Suganthini

ஊடகவியலாளர்களின் கேள்விகளைத் தவிர்த்துக்கொள்வதற்காக, தாய்லாந்துப் பிரதமர் பிரயுத் ஸான் ஓச்சா (Prayuth Chan-ocha) புதிய வகையான தந்திரோபாயத்தைக் கையாண்டுள்ளார்.

தாய்லாந்துத் தலைநகரான பாங்கொக்கிலுள்ள அரசாங்க இல்லத்துக்கு வெளியில் ஊடகவியலாளர்களை, பிரதமர் நேற்று (திங்கட்கிழமை) சந்தித்துள்ளார். இதன்போது, ஊடகவியலாளர்களின் கேள்விகளைத் தவிர்த்துக்கொள்ள அவர்  விரும்பியுள்ளார்.

இந்நிலையில், அரசாங்க வளாகத்துக்குள் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படம் பொறித்த பதாகையை ஊடகவியலாளர்களுக்குக் காட்டி, இந்தப் பையனிடம் உங்களது கேள்விக்கணைகளைத் தொடுங்களெனக் கூறிவிட்டு, அங்கிருந்து மிகவும் சூட்சுமாக நழுவிச் சென்றுள்ளார்.

‘அரசியலிலோ அல்லது முரண்பாடு தொடர்பாகவோ எவ்வகையான கேள்விகளைக் கேட்க நீங்கள் விரும்பினாலும்,  இந்தப் பையனிடம் கேட்க முடியும்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

சிறுவர் தினத்தையிட்டு இவரது உருவப்படம் பொறித்த பல்வேறு வடிவங்களிலான பதாகை, அரசாங்க வளாகத்துக்குள் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg