Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லசந்தவைக் கொன்றவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் – மங்கள சமரவீர

In இலங்கை
Updated: 10:36 GMT, Jan 9, 2018 | Published: 10:32 GMT, Jan 9, 2018 |
0 Comments
1052
This post was written by : elayathambi
lasantha

இலங்கையின் புகழ் பூத்த பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்த குற்றவாளிகள் அனைவரையும்,  நீதியின் முன் கொண்டுவரும்  கடப்பாடு இன்றைய அரசுக்கு இருப்பதாக, ஊடகத் துறை அமைச்சர் மங்கள சமர வீர தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கும், சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் தேவைப்படும் அனைத்து வசதிகளையும், ஆதரவினையும் இவ்விசாரணை தொடர்பாக அரசு அளிக்க வேண்டும் என அமைச்சர் கோரியுள்ளார். லசந்தவை கொலை செய்தவர்கள், கொலைக்கு துணை போனவர்கள்,  கொலையை தூண்டியவர்கள் என அனைவரும் நீதியின் முன் கொண்டுவரப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்டு நேற்றுடன், ஒன்பது ஆண்டுகள்  முடிவடைந்த பின்னும்கூட  குற்றவாளிகள் இன்னும் இனம் காணப்படவில்லை. 1994 ஆம் ஆண்டு சண்டே லீடர் பத்திரிகையை ஸ்தாபித்த லசந்த, மிக இளம் வயதில் சன் பத்திரிகைச் செய்தியாளராக தனது ஊடகப் பணியை ஆரம்பித்தவர். 1982 ஆம் ஆண்டு ஐலண்ட் பத்திரிகையில் இணைந்த லசந்த, 1994 ஆம் ஆண்டு ஆரம்பித்த  சண்டே லீடர் மூலம் அன்றைய மஹிந்த தலைமையிலான ஆட்சியாளர்களை மிகக் கடுமையாக விமர்சித்தார்.

அன்றைய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் ஆயுத ஊழல் தொடர்பாக நீதிமன்றில் சாட்சியம் தரத் தயாராக இருந்த லசந்த, குறித்த சாட்சிய தினத்திற்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)