Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஹிந்த இப்போது ஜனாதிபதி இல்லை : டிலான் பெரேரா

In இலங்கை
Published: 10:52 GMT, Jan 9, 2018 |
0 Comments
1172
icon_com
This post was written by : Puvanes

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சுற்றியுள்ளவர்களே அவர் மீது அவதூறுகளை பரப்பிவருகின்றனர் என சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்த ஊடகசந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து வெளியிடுகையில்,

தற்போதைய அரசாங்கம் மூலமாக செயற்படுத்தப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் அனைத்திற்கும் மஹிந்தவே காரணம் என அவரைச் சார்ந்தவர்களே கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இது எந்தவகையிலும் பொறுத்தமற்றது. மஹிந்தவைச் சார்ந்தவர்களே ஏன் அவர் மீது அவதூறுகளைப்பரப்பி வருகின்றனர் என்பது தெரியவில்லை.

அதேபோன்று மஹிந்த ராஜபக்ஷவும் தான் முன்னாள் ஜனாதிபதி மட்டுமே தற்போது ஜனாதிபதி இல்லை என்பதை மறந்து விட்டு பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருகின்றார்.

மஹிந்த நினைப்பது போன்று தற்போது அவரால் எந்த மாற்றத்தையும் கொண்டு வரமுடியாது. அதற்கான அதிகாரங்கள் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் மாத்திரமே உள்ளன என்பதை அவர் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.

தற்போதைய தேர்தல் காலத்தில் ஆட்சியை கவிழ்த்துவிடுவோம் என பலர் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர். அப்படி ஆட்சியை கவிழ்த்துவிட முடியாது. 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலின் மூலமாகவே ஆட்சி மாற்றம் ஏற்படுத்த முடியும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் டிலான் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து மத்தியவங்கி பிணை முறி ஊழல் தொடர்பாக டிலான் பெரேரா கருத்து வெளியிடும் போது, ஜனாதிபதியும், சுதந்திரக்கட்சியும் உண்மைக்கு புறம்பாக செயற்படவில்லை எனவும், நேர்மையான வகையிலேயே செயற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)