Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து

In கிாிக்கட்
Published: 10:56 GMT, Jan 9, 2018 |
0 Comments
1259
This post was written by : Elakkiya

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் நியூசிலாந்து அணி, 8 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகளைக் கொண்ட தொடரில், 2-0 என்ற ரீதியில் நியூஸிலாந்து முன்னிலைப் பெற்றுள்ளது.

நெல்சன் நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில், நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து, 246 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில், மொஹம்மட் ஹபீஸ் 60 ஓட்டங்களையும், சதாப் கான் 52 ஓட்டங்களையும், இறுதி நேரத்தில் அதிரடி காட்டிய ஹசன் அலி 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

தொடர்ந்து 247 என்ற வெற்றி இலக்கை நோக்கி, நியூசிலாந்து துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் டக்வேர்த் லீவிஸ் விதிப்படி போட்டி 25 ஓவர்களுக்கு குறைக்கப்பட்டதுடன், நியூசிலாந்திற்கு 151 ஓட்டங்கள் வெற்றி இலக்காகவும் நிர்ணயிக்கப்பட்டது.

என்றபோதிலும், நியூசிலாந்து அணி, 23.5 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. நியூசிலாந்து அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மார்டின் குப்டில் 86 ஓட்டங்களையும், ரொஸ் டெய்லர் 45 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றுக் கொடுத்தனர்.

மிகச்சிறப்பாக துடுப்பெடுத்தாடிய மார்டின் குப்டில் போட்டியின் நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியுடன், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், நடைபெற்று முடிந்த இரு போட்டிகளிலும் வெற்றி பெற்ற நியூசிலாந்து, 2-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.

இவ்விரு அணிகளுக்கிடையிலான 3வது ஒருநாள் சர்வதேச போட்டி, எதிர்வரும் 13 ஆம் திகதி டுனீடனில்(Dunedin) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)