Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போக்குவரத்து ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்த உத்தேசம்: முதல்வர் தெரிவிப்பு

In இந்தியா
Published: 11:17 GMT, Jan 9, 2018 |
0 Comments
1805
This post was written by : Kemasiya

போக்குவரத்து ஊழியர்களின் சம்பளத்தை 2.44 மடங்கு உயர்த்த உத்தேசித்துள்ளதாகவும், அதனை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சட்டசபைக் கூட்டத்தில், போக்குவரத்து ஊழியர்களின் பிரச்சினை குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பிய போதே முதல்வர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன் போது, “தற்போதுள்ள நிலைமையினை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அரச போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குகிறது. எனவே இந்த சம்பள உயர்வை ஏற்று, மக்களின் நிலைமையை கருத்தில் கொண்டு ஊழியர்கள் பணிக்குசெல்ல வேண்டும்.

அதே போன்று உயர் நீதிமன்றம் இரண்டு தடவைகள் ஊழியர்கள் பணிக்கு செல்ல வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதை மதித்து பணிகளை ஆரம்பிக்க வேண்டும்.

மான்புமிகு எதிர்கட்சி தலைவர் மற்றும் அமைச்சர்கள் கூறியதைப்  போன்று தொழிலுக்கு செல்பவர்கள், மாணவர்கள் மற்றும் பொங்களை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் என அனைவரும் போக்குவரத்தில் பெரும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.

எனவே இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஊழியர்களை பணிக்கு அமர்த்த எதிர்க்கட்சியினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்”. என இவ்விடத்தில் கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் கூறியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

 vcnfgcn cn cfgn cvnbcbn

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)