Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

140 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கனேடியர் 27 ஆண்டுகளில் விடுதலை

In கனடா
Updated: 11:38 GMT, Jan 9, 2018 | Published: 11:37 GMT, Jan 9, 2018 |
0 Comments
1097
This post was written by : Elakkiya

அமெரிக்காவில் 140 ஆண்டுகள்  சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கனேடியர் நாடுதிரும்பியுள்ளார்.

கனடாவிலிருந்து வட கரோலினாவுக்கு தனது தந்தையுடன் குடியேறிய Derek Twyman  என்பவருக்கு கடந்த 1989 ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்முறையற்ற திருட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டு 140 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் 27 ஆண்டுகளுக்கும் மேலாக கரோலினா சிறையில் வாடிய Twyman  விடுதலை செய்யப்பட்டுள்ளார். வடக்கு கரோலினாவின் பரோல் சபைக்கு நீதிபதி வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் வுறலஅயn விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் விடுவிக்கப்பட்ட Twyman உடனடியாக கனடா திரும்பவில்லை. ஜூலை மாதம் கனடா திரும்பிய அவரை அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்க துறையினர் 118 நாட்கள் தடுத்து வைத்திருந்தனர். அதன்பின்னர் கடந்த நவம்பர் மாதம் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச தண்டனையிலிருந்து விடுவித்த வழக்கறிஞர்களுக்கு Twyman  நன்றி தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg