Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நட்சத்திர கலைவிழாவில் அஜித் பங்குபற்றாதது ஏன்?

In சினிமா
Updated: 12:09 GMT, Jan 9, 2018 | Published: 11:23 GMT, Jan 9, 2018 |
0 Comments
1694
This post was written by : Arul Jesu

நடிகர் அஜித்திற்கு நட்சத்திர கலைவிழாவிற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் தான் ஏன் வரவில்லை என்ற பதிலை கூறியுள்ளதாக எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் சமீபத்தில் மலேசியாவில் பிரமாண்டமான நட்சத்திர கலை விழா நடைபெற்றது. ரஜினிகாந், கமல்ஹாசன் உட்பட கோலிவூட்டின் முக்கிய நடிகர் நடிகைகள் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான கட்டடம் கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்ற நிலையில் அதற்கான நிதிசேகரிப்பிற்காக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவிற்கான நுழைவுக் கட்டணங்கள் மூலம் பெறப்படும் தொகை நடிகர் சங்க கட்டிடம் கட்ட பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நடிகர் சங்க கட்டடத்தின் நிதிக்காக நடாத்தப்படும் கலை விழாவில் கலந்துகொள்ள அஜித்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அஜித் “மக்கள் கொடுக்கும் நுழைவுச்சீட்டுப் பணத்திலிருந்துதான் நாம் சினிமாவில் சம்பாதிக்கின்றோம். அதனால் நடிகர் சங்க கட்டடத்துக்கு நாமே நிதியை அளிக்கலாம்” என்று கூறியதாக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது சிங்கப்பூரில் நடந்த கலைவிழாவிற்கு அழைப்பு விடுத்திருந்தபோதும் அஜித் இதே பதிலைத்தான் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg