Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேர்தலுக்காக மதுவும், பணமும் பகிர்ந்தளிக்கப்படுகின்றன: சக்திவேல்

In இலங்கை
Published: 12:00 GMT, Jan 9, 2018 |
0 Comments
1166
icon_com
This post was written by : Puvanes
shakthivel001

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் வெற்றி நூறுசதவீதம் உறுதிசெய்யப்பட்டுள்ளது என மத்திய மாகாண சபை உறுப்பினர் பி.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போதைய சூழலில் எமது கட்சியின் வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளதால் அதனை குழப்பும் நோக்கத்துடன் சிலர் செயற்பட்டு வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக எமது வெற்றிக்கு எதிராகவுள்ள அரசியல்வாதிகள் சிலர் அண்மையில் கொட்டகலை பகுதியில் பணம் பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்தனர் இந்த விடயத்திற்கு தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நாம் தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்திருக்கின்றோம் எனவும் சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியுடன் மோதி வெற்றி பெற முடியாத வேட்பாளர்கள் சிலர் தங்கள் உடமைகளுக்கு தாமே சேதத்தினை ஏற்படுத்திக்கொண்டு அந்தக் குற்றச்சாட்டினை எம்மீது சுமத்தி வருகின்றனர் எனக் குறிப்பிட்ட அவர், எமது கட்சி அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மலையக மக்களுக்கு மதுபானம் மற்றும் பணத்தினை பகிர்ந்தளித்து தேர்தலில் வெற்றி பெற சிலர் முயற்சி செய்து வருகின்றார்கள். எனினும் மலையக மக்கள் தற்போது தொழிலாளர் காங்கிரசின் தேவையை உணர்ந்திருக்கின்றார்கள் எவ்வாறாயினும் எமது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் சக்திவேல் மேலும் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)